/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு
/
கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு
ADDED : நவ 28, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கடலுார் துறைமுகத்தில் 3 ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி புதுச்சேரியில் இருந்து 470 கி.மீ., தொலைவில் நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு 'பெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புயல் நெருங்கி வரும் வேளையில் 25 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் நெருங்கவதையொட்டி, கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.