/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் முன்னெச்சரிக்கை ஹைமாஸ்கள் இறக்கம்
/
புயல் முன்னெச்சரிக்கை ஹைமாஸ்கள் இறக்கம்
ADDED : டிச 01, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலுார் மாநகராட்சியில் 15 இடங்களில் இருந்த ஹைமாஸ் விளக்குகளை ஊழியர்கள் பாதுகாப்பாக இறக்கி வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் பெஞ்சல் புயல் உருவாகிய நிலையில், நேற்று மாலை கரையை கடக்கும் என்றும், அப்போது 70முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்றுவீசக்கூடும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து கடலுார் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
காற்றுவீசும் போது ஹைமாஸ் விளக்குகள் அறுந்து விழுந்து சேதமடையாமல் இருக்க, மாநகராட்சி பகுதியில் இருந்த 15 ஹைமாஸ் விளக்குகளை பாதுகாப்பாக தரையிறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

