sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் பொதுமக்கள் கடும் பாதிப்பு

/

 ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் பொதுமக்கள் கடும் பாதிப்பு

 ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் பொதுமக்கள் கடும் பாதிப்பு

 ஆமை வேகத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் பொதுமக்கள் கடும் பாதிப்பு


ADDED : நவ 21, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் மழை நீர் கால்வாய் கட்டுமான பணிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் மந்தமாக, நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சிஅலுவலகத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் மழை நீர் வெளியேற கால்வாய் அமைக்கும் பணிக்கு 1.2 கி.மீ துாரத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் இதற்கான பணிகள் கடந்தாண்டு செப்ட ம்பர் மாதம் துவங்கியது.

பணிகளின் துவக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கால்வாய்கள் ஒரே நேராக தொடர்ச்சியாக கட்டாமல் பகுதி பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பணிகள் முழுமை பெறவில்லை.

மேலும் வடிகால் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கட்டப்பட்ட கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக சன்னதி வீதி,கடைவீதி,தேரடி அருகே கோவிலுக்கு செல்லும் வழி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கால்வாயில் இருந்து தேங்கி நிற்கும் கழிவு நீர் வெளியேற முடியாமல் துர்நாற்றம் வீசிவருகிறது.

சரியான திட்டமிடல் இல்லாததால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் வெளியேற சாலைகளின் குறுக்கே கல்வெர்ட்கள் அமைக்கப்படவில்லை. ஆனால் தற்காலிகமாக கழிவு நீர் வெளியேற சிறிய குழா ய்களை பதித்துள்ளனர்.

இதனால் கழிவு நீர் சரியாக வெளியேறாமல் தேங்கி நின்று நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக இந்த கால்வாய்களில் தேங்கி நின்ற கழிவு நீர் புகழ்பெற்ற பூவராகசுவாமி கோவிலுக்குள் புகுந்ததால் அதிக அளவில் சாக்கடை நீர் கோவிலுக்குள் தேங்கி நின்று பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கடந்த ஜூன் மாதம் ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக நல சங்கம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் பணிகள் சற்று வேகமெடுப்பது போல் தெரிந்தாலும் சில தினங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து சில தினங்களில் சாலையின் ஓரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதியும் பணிகள் நடந்தது. விரைவில் பணி முடியும் என நினைத்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கடந்த 2 மாதங்களாக பேவர் பிளாக் பதியும் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் சாலையோரங்களில் உள்ள பள்ளங்களில் வாகனங்களில் செல்வோர் தவறிவிழுந்து காய மடைந்து வருகின்றனர்.

குறிப்பாக சன்னதி வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன்பு கடந்த, 2 மாதங்களுக்கும் மேலாக கருங்கல் ஜல்லிகள் குவியலாக கொட்டியுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மிகவும் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கும் கால்வாய் பணிகளை சரியான திட்டமிடல் இல்லாமல் நடக்கும் கால்வாய் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பணிகளை சரியான திட்டமிடலுடன் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'இன்னும் சில தினங்களில் பணிகள் மீண்டும் துவங்கும். 3 இடங்களில் கல்வெர்ட்கள் அமைக்கப்படும். வரும் டிச.15,ம் தேதிக்குள் பணிகள் முடிவடையும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us