/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுவர், சிறுமியர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது... அதிகரிப்பு: விபத்துக்களை தடுக்க போலீசார் நடவடிக்கை தேவை
/
சிறுவர், சிறுமியர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது... அதிகரிப்பு: விபத்துக்களை தடுக்க போலீசார் நடவடிக்கை தேவை
சிறுவர், சிறுமியர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது... அதிகரிப்பு: விபத்துக்களை தடுக்க போலீசார் நடவடிக்கை தேவை
சிறுவர், சிறுமியர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது... அதிகரிப்பு: விபத்துக்களை தடுக்க போலீசார் நடவடிக்கை தேவை
ADDED : நவ 21, 2025 05:41 AM
கடலுார்: சிறுவர், சிறுமியர் டூ வீலர், கார் போன்ற வாகனங்களை ஓட்டி வருவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. ஆபத்தை உணராமல் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இன்றைய நவீன உலகில் வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். செல்வந்தவர்கள் காரில் செல்வதும், நடுத்தர வர்க்கத்தினர் இரு சக்கர வாகனத்தில் செல்வதும் வழக்கமாக உள்ளது.
தற்போது வீட்டில் உள்ள சிறுவர்கள், மாணவ -மாணவியர் வாகனத்தை தனியாக ஓட்டுவது அதிகரித்து வருகிறது. மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்வதற்கும் இரு சக்கர வாகனங்களை பயன் படுத்தி வருகின்றனர்.
வாகனம் ஓட்டுவதற்கு அடிப்படை விதிமுறை, தெரியாத நிலையில், சாலையில் உள்ள சைன்போர்டுகள் உள்ளிட்டவைகளை என்ன என்று கேட்கும் சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதால் மற்றவர்கள் மிரண்டு பயப்படும் நிலை உள்ளது.
பெற்றோர் பாராமுகமாக இருப்பதால் அதைப்பயன்படுத்திக்கொண்டு சிறுவர்கள் பயமின்றி வாகனத்தில் செல்கின்றனர். இதில், சிறுமிகளும் விதி விலக்கு கிடையாது.
சாலையில் இக்காட்டான சூழ்நிலை வரும்போது அவர்களால் கண்ட்ரோல் செய்து நிறுத்த முடியாமல், எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படு த்துகின்றனர்.
இதை கட்டுப்படுத்த மத்திய அரசு 18 வயதிற்கு கீழ் சிறுவர், சிறுமியர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம், அல்லது விபத்து ஏற்படுத்திய பிள்ளையின் தந்தை அல்லது பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கபடுவர் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தை சரிவர நடைமுறைபடுத்தாததால் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில் போலீசாரும் சிறுவர் , சிறுமியர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டால், அவர்களை நிறுத்தி லைசன்ஸ் இருக்கிறதா என்று கேட்பது கூட இல்லை. அவர்கள் வயதுக்கு வராத மைனர்களாக இருப்பதால் போலீசாரின் கருணைப்பார்வையால் எளிமையாக தப்பி செல்கின்றனர்.
அதனால்,இனிமேல் போலீசார் கண்டிப்பாக வாகன சோதனையின்போது, குறைந்த வயதுடையவர்கள் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவர்கள் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர், சிறுமியர் ஏற்படுத்தும் வாகன விபத்து குறையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

