/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
ADDED : டிச 29, 2025 05:59 AM

கடலுார்: கடலுார் வெள்ளி மோட்டான் தெரு சோலை வாழியம்மன் கோவிலில் ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டு ஊர்வலமாக அழைத்துவந்த விநோத வழிபாடு நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் சோலைவாழி மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டுதலின்பேரில், ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு பெண் வேடமிட்டும், பெண் குழந்தையாக இருந்தால் ஆண் வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கிறது.
அதன்படி, இந்தாண்டு ஆண், பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நேற்று நடந்தது.
ஆண், பெண் வேடமிட்டவர்கள் ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின், சோலைவாழி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சிறப்பு அழைப்பாளர் காங்., மாநகர தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர்குமார், ஊர் முக்கியஸ்தர்கள் சவுந்தர்ராஜ், முருகன், செந்தில்குமார், சிவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

