/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
/
புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
ADDED : டிச 29, 2025 05:59 AM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு, அன்றைய தினம் அதிகாலை 4:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அதிகாலை 5:00 மணியளவில் வேதமந்திரங்கள், திவ்ய பிரபந்தம் முழங்க 'சொர்க்க வாசல் திறப்பு' உற்சவம், மகா தீபாராதனை நடக்கிறது.
பூஜை ஏற்பாடுகளை பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.