/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெரு மின்விளக்கு சுவிட்ச் சீரமைப்பு
/
தெரு மின்விளக்கு சுவிட்ச் சீரமைப்பு
ADDED : மே 31, 2025 11:46 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் பழுதான தெரு மின்விளக்கு சுவிட்ச் 'தினமலர்' செய்தி எதிரொலியாக சரி செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஏராளமான தெரு மின்விளக்குகள் உள்ளன.
இதனை பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் இல்லை. ஒப்பந்த பணியாளர்கள் மூலமே விளக்குகளை எரிய வைக்கவும், நிறுத்தவும் வேண்டிய நிலை இருந்தது.
இவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் மின்விளக்கை நிறுத்த முடியாததால் மின் கட்டணம் அதிகமானது. இதனை தவிர்க்க கடந்த ஒரு ஆண்டிற்கு முன் பல லட்சம் செலவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி சுவிட்ச் வைக்கப்பட்டது.
ஆனால் கந்தசாமி தெரு, அண்ணாமலை தெரு உள்ளிட்ட இடங்களில் தானியங்கி சுவிட்ச் பழுதானதால் கடந்த பகல் நேரத்திலும் மின்விளக்கு எரிந்து கொண்டே இருப்பதால் மின்சாரம் விரயமாவதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கமிஷ்னர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில் தெரு மின்விளக்கு சுவிட்ச் சரி செய்யப்பட்டது.