/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய வாக்காளர் பட்டியலில் தெருவின் பெயர் மாற்றம்: மக்கள் மத்தியில் குழப்பம்

ADDED : நவ 18, 2024 06:50 AM

நடுவீரப்பட்டு ; சி.என்.பாளையம் வாக்காளர் பட்டியலில் தெருவின் பெயர் மாறி வந்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதி சி.என்.பாளையம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண் 2 உள்ளது.
இந்த பாகத்தில் நடுத்தெரு, பள்ளிவாசல், செட்டியார்தெரு, கடைவீதி, சவலைவீதி ஆகிய பகுதியில் 718 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நடுத்தெருவில் 301 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது அரசு வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் நடுத்தெருவிற்கு பதிலாக மத்திய தெரு என புதியதாக தேர்தல் அலுவலர்களாகவே பெயர் வைத்து வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையில் நடுத்தெரு என்று தான் உள்ளது.
இப்போது அதிகாரிகள் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் வைத்துள்ள தால், புதிய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் மத்திய தெரு என வரும் நிலை உள்ளது.
இது புதிய குழப்பம் ஏற்படுத்தும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டள்ளது.
மேலும் இறந்த 30 வாக்காளர்களின் பெயர் மீண்டும் வந்துள்ளது.
ஆகையால் தேர்தல் அலுவலர்கள் பாகம் எண் 2ல் உள்ள மத்திய தெருவை மீண்டும் நடுத்தெரு என திருத்தம் செய்து, இறந்த வாக்கா ளர்களின் பெயரை நீக்கம் செய்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.