/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு கடலுாரில் மனித சங்கிலி போராட்டம்

ADDED : ஆக 31, 2025 06:54 AM

கடலுார் : எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் கடலுாரில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கடலுார் மாநகருக்கான பஸ் நிலையம், கடலுார் சட்டசபை தொகுதியிலேயே அமைக்க வேண்டும். மாவட்டத்தின் தலைநகரில் மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும், கொண்டங்கி ஏரி, கெடிலம் மற்றும் பெண்ணையாற்றின் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாவடியிலிருந்து மஞ்சக்குப்பம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் பேசினார்.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் துவக்க உரையாற்றி னார்.
அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பை ச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கட்ரமணி நன்றி கூறினார்.