/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யை கண்டித்து போராட்டம் : நிலம் கொடுத்த விவசாயிகள் முடிவு
/
என்.எல்.சி.,யை கண்டித்து போராட்டம் : நிலம் கொடுத்த விவசாயிகள் முடிவு
என்.எல்.சி.,யை கண்டித்து போராட்டம் : நிலம் கொடுத்த விவசாயிகள் முடிவு
என்.எல்.சி.,யை கண்டித்து போராட்டம் : நிலம் கொடுத்த விவசாயிகள் முடிவு
ADDED : பிப் 08, 2025 12:21 AM

விருத்தாசலம் : என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகள், சமமான இழப்பீடு கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி.,க்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கம்மாபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் அருளரசன் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி, சுதாகர், சன்னியாசி, செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
நெய்வேலி என்.எல்.சி., யின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கம்மாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த 2008-2009ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது என்.எல்.சி., நிர்வாகம் 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
ஆனால், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 17 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு, நிரந்தர வேலை அல்லது வேலைக்கு பதிலாக நிரந்தர வைப்புத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வாழ்வாதார தொகையாக வழங்கப்பட்ட 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் என்பதை என்பது ஏற்க முடியாது.
எனவே, அனைவருக்கும் சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.