/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுடுகாட்டிற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்
/
சுடுகாட்டிற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்
சுடுகாட்டிற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்
சுடுகாட்டிற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்
ADDED : மார் 14, 2024 06:44 AM

புதுச்சத்திரம், : சுடுகாட்டிற்கு பாதை கேட்டு, இறந்தவர் உடலை, கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல கிராம மக்கள் முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லுாரில் நாடார் சமுதாய மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததால், தனியார் இடத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால், அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால், சுடுகாட்டிற்கு பாதை வசதி கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன்,76; உடல் நலக்குறைவால் இறந்தார். அதனை அறிந்த போராட்டக்குழுவினர் சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு, ஜெயராமன் உடலை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தயாராகினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, புவனகிரி தாசில்தார் தனபதி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, இப்பிரச்னை தொடர்பாக சப் கலெக்டர் முன்னிலையில் சமாதானக்கூட்டம் நடத்தி தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதனையேற்ற பொதுமக்கள், ஜெயராமன் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

