/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
படிக்க பிடிக்காததால் மாணவி தற்கொலை
/
படிக்க பிடிக்காததால் மாணவி தற்கொலை
ADDED : செப் 25, 2024 06:40 AM
புவனகிரி, : புவனகிரி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் திலகர் மகள் ஆர்த்தி,18; பிளஸ் 2 முடித்த இவர், புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள அரவிந்தர் கண் மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., சேர்ந்தார். அது பிடிக்காததால், வடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.
அதுவும் பிடிக்காததால், சில தினங்களாக கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஆர்த்தி, கடந்த 22ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.
மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.