ADDED : நவ 16, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : லைட் சுட்ஜ் போட்ட மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்குமார் மகன் சங்கரிநாதன்,17; இவர் எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு மாட்டு கொட்டகைக்கு சென்றவர் லைட் சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து சென்று, சங்கரிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.