/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொலைக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
தொலைக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 06:30 AM

திட்டக்குடி : திட்டக்குடியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தொலைக்கல்வி மையத்தில் திட்டக்குடி கற்போர் உதவி மையம் சார்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மாலதி பிரேம்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமிஷனர் முரளிதரன், 2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பாட பிரிவிற்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல், நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மைய பணியாளர்கள் லட்சுமி, அனிதா, பரமேஸ்வரி, சுகுணா, சிவசங்கரி, மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மைய மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.