/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வில்வித்தை போட்டி; மாணவர்கள் ஆர்வம்
/
வில்வித்தை போட்டி; மாணவர்கள் ஆர்வம்
ADDED : அக் 02, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் விஜயராஜா யோகா மற்றும் தற்காப்பு கலை அகாடமியின் வில்வித்தை கிளப் சார்பில், கடலுார் செயின்ட்ஜோசப் கல்லுாரியில், பீல்டு இன்டோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டது.
புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
விஜயராஜா தற்காப்புக்கலை அகாடமி தலைமை பயிற்சியாளர் ராஜகோபாலன் தலைமையில் பயிற்சியாளர்கள் போட்டிகளை நடத்தினர். 18 பள்ளிகளைச் சேர்ந்த 165 மாணவர்கள் பங்கேற்றனர்.
தேசிய அணி போட்டிக்கான தகுதி போட்டிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

