/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் மாணவர்கள் எதிர்பார்ப்பு
/
பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் மாணவர்கள் எதிர்பார்ப்பு
பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் மாணவர்கள் எதிர்பார்ப்பு
பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் மாணவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2025 11:50 PM
புதுச்சத்திரம்,: தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயித்துறை, தானூர், சிறுபாலையூர், கருவேப்பம்பாடி, சம்பாரெட்டிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிளில் வந்து செல்கின்றனர். அவர்கள் கொண்டு வரும் சைக்கிளை, நிறுத்துவதற்கு ஷெட் இல்லாததால் திறந்த வெளியில் நிறுத்தப்படும் நிலை உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழைக் காலங்களில் சைக்கிள் வீணாகும் நிலை உள்ளது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.