/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு மயக்கம் நெய்வேலியில் பரபரப்பு
/
மாணவர்களுக்கு மயக்கம் நெய்வேலியில் பரபரப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:54 AM

நெய்வேலி: நெய்வேலியில் யோகா தினத்தையொட்டி நடந்த விழாவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 75 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நெய்வேலியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 6,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வட்டம் -10ல் உள்ள பாரதி விளையாட்டரங்கில் பயிற்சி செய்து வந்தனர்.
நேற்று பயிற்சி முடிந்ததும் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, உணவை சாப்பிட்ட 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடன், அருகில இருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த அமைச்சர் கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விஷ்ணுபிரசாத் எம்.பி., சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர், மாணவர்களிடம் நலம் வசித்து சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.