/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ் திறனறி தேர்வு மாணவர்கள் ஆர்வம்
/
தமிழ் திறனறி தேர்வு மாணவர்கள் ஆர்வம்
ADDED : அக் 20, 2024 06:27 AM

விருத்தாசலம், : பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பள்ளி கல்வி துறை சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 1 மாணவர்களுக்கு 'தமிழ் திறனறி தேர்வு' நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் 10ம் வகுப்பு தமிழ் பாடபுத்கத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழ் திறனறி தேர்வு நாடு முழுவதும் நேற்றுநடந்தது. இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில்நடந்த தேர்வில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.
விருத்தாசலம் அரசு மேல்நிலை பள்ளி மையத்தில் மட்டும் 217 மாணவர்களில் 211 பேர் தேர்வு எழுதினர்.