/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவிகள் 4.14 சதவீதம் கூடுதல் தேர்ச்சி
/
மாணவிகள் 4.14 சதவீதம் கூடுதல் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வருவாய் மாவட்டத்தில் 10ம் வகுப்பு வழக்கம் போல் மாணவிகளே அதிகளவில் 95.97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடலுார் வருவாய் மாவட்டத்தில் 17,044 மாணவர்கள், 15,417 மாணவிகளும் உட்பட மொத்தம் 32,461 பேர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 15,882 மாணவர்களும், 14,796 மாணவிகள் என, மொத்தம் 30, 678 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.18 ஆகவும், மாணவிகளுக்கு 95.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.51 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவீதம் கூடுதல் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.