/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிழற்குடை ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி
/
நிழற்குடை ஆக்கிரமிப்பால் மாணவர்கள் அவதி
ADDED : ஜன 02, 2025 08:33 PM

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளத. இந்த பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த பல கிராம மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பஸ்சுக்கு காத்திருக்கும் நிழற்குடை சுத்தம் இல்லாமலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளதால், சாலையிலேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துக்கள் நடக்கும் அவலநிலை உள்ளது.
ஆகையால் கடலுார் ஒன்றிய அதிகாரிகள் இந்த நிழற்குடையை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.