/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்கள் தவிப்பு
/
விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்கள் தவிப்பு
ADDED : செப் 25, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் சுற்றியுள்ள மேல்பாதி, கீழ்பாதி, பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் இருந்தும் பயிற்சி பெற, விளையாட்டு மைதானம் இல்லாமால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே, மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாணவ, மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை கருத்தில் கொண்டு விளையாட்டு பயிற்சிக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.