/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட இடமின்றி மாணவர்கள் தவிப்பு
/
விளையாட இடமின்றி மாணவர்கள் தவிப்பு
ADDED : பிப் 21, 2024 07:59 AM

விருத்தாசலம் அடுத்த தொரவளூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி ஆசிரியர்களை கொண்டு காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் பயிற்சி தரப்படுகிறது.
இந்நிலையில், மைதானத்தை சுற்றிலும் முட்செடிகள் மண்டி, மேடு பள்ளமாக இருப்பதால் மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். மேலும், புதர்மண்டிய பகுதியில் விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால் மாணவர்களுக்கு ஆபத்து நிறைந்துள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

