/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் நிலையத்தில் மாணவிகள் பயிற்சி
/
வேளாண் நிலையத்தில் மாணவிகள் பயிற்சி
ADDED : மார் 22, 2025 07:05 AM
புவனகிரி; மிராளுர் வேளாண் நிலையத்தில் மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் புவனகிரி வேளாண் நிலையத்தில் மாணவியர்கள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, கீர்த்தனா மற்றும் பாலமுரளிதர் உள்ளிட்டோர் பயிற்சி பெற்றனர்.
அப்போது வேளாண் பொருட்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து வேளாண்மை அலுவலர் அறிவழகன், உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
விதைகளை சேமித்தல், சுத்திகரித்தல், விதைகளை விதைப்பது, முளைப்புத் திறன் உள்ள விதைகளை தயார் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.