/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் விபத்து எதிரொலி சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு
/
ரயில் விபத்து எதிரொலி சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு
ADDED : ஜூலை 30, 2025 07:30 AM

கடலுார் : செம்மங்குப்பம் ரயில் விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த இடத்தில் உள்ள கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டு, சுரங்கப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் கடந்த 8ம் தேதி, பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் இறந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் கால தாமதம் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் தாசில்தார் மகேஷ், டி.எஸ்.பி., ரூபன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மதியம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து சேடப்பாளையம், வரக்கால்பட்டு ரயில்வே கேட் பகுதியிலும் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.