/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெ.பொன்னேரி மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க ஆய்வு
/
பெ.பொன்னேரி மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க ஆய்வு
பெ.பொன்னேரி மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க ஆய்வு
பெ.பொன்னேரி மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க ஆய்வு
ADDED : அக் 11, 2024 06:17 AM

பெண்ணாடம்: பெ.பொன்னேரி மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில், பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. ஆனால் மேம்பாலம் மற்றும் ரவுண்டானாவில் மின்விளக்கு வசதிகள் இல்லை. சர்வீஸ் சாலைப்பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்லும்போது விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டது. விபத்தை தடுக்க கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, நேற்று பகல் 11:00 மணியளவில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையது மஹ்மூத், தாசில்தார் அந்தோணிராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் மற்றும் சிமென்ட் ஆலை அதிகாரிகள் மேம்பாலம் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
அதில், விரைவில் சர்வீஸ் சாலை பணி, மின் விளக்குகள் சரிசெய்வ தாக அரசு அதிகாரிகள், சிமென்ட் ஆலை அதிகாரிகளும் உறுதியளித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், ரோட்டரி சங்க தலைவர் நாராயணசாமி, ராம்கோ சிமென்ட்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன், எஸ்.என்.ஜெ., நிறுவனம் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி சங்க சாசன தலைவர் ஞானகணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

