/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை சுகாதார நிலையம் காட்சி பொருளான அவலம்
/
துணை சுகாதார நிலையம் காட்சி பொருளான அவலம்
ADDED : ஜூலை 03, 2025 11:13 PM

பெண்ணாடம்: திருமலை அகரத்தில் காட்சிப் பொருளாக உள்ள துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், அருகேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி, சுகாதார நிலையம் பூட்டப்பட்டது.
இதனால் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், விருத்தாசலம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இப்பகுதி கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, திருமலை அகரத்தில் காட்சிப்பொருளாக உள்ள துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.