/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண விழா
/
சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண விழா
ADDED : அக் 30, 2025 07:19 AM

விருத்தாசலம்: கந்த சஷ்டியை முன்னிட்டு, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சண்முக சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷகம், மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்றிரவு விருத்தாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில், பெரியநாயகர் சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கந்த சஷ்டி கவசத்தை மனமுருக பாடினர்.
சிறப்பு பூஜைகளுடன், இரவு 7:30 மணியளவில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடந்தது.

