ADDED : அக் 28, 2025 05:58 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிகுப்பம் கிராமத்தில் மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 25ம் தேதி வாஸ்துசாந்தி, அனுக்ஞை, கணபதி, லட்சுமி பூஜைகள் துவங்கியது.
நேற்று முக்கிய நிகழ்வாக, காலை 5:00 மணிக்கு கோபூஜை, கஜபூஜை, அஸ்வமேத பூஜைகள் நடந்தது. காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், நவக்கிர ேஹாமங்கள் நடந்தன.
தொடர்ந்து, 9:50 மணியவில் கடம் புறப்பாடுடன், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

