/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி படைவீரர் வாரிசுகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கு மானியம்
/
மாஜி படைவீரர் வாரிசுகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கு மானியம்
மாஜி படைவீரர் வாரிசுகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கு மானியம்
மாஜி படைவீரர் வாரிசுகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கு மானியம்
ADDED : மார் 25, 2025 06:57 AM
கடலுார்: முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் வாரிசுகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கான செலவின தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெறும் முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் சிறார்களுக்கு, முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து அதற்கான செலவின தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
தேர்ச்சி சான்று, தமிழக அரசால் அங்கரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி காலத்தில் செலுத்திய தொகைக்கான ரசீதுகள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். 01.04.2020க்கு பின் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், விவரங்களுக்கு கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.