/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி திடீர் நிறுத்தம்: கமிஷன் பிரச்னை தான் காரணமா?

ADDED : நவ 04, 2025 09:48 PM

திருப்பாதிரிப்புலியூர் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் திடீரென கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டு பாதியில் நிற்கிறது.
புதுச்சேரி-கடலுார் சாலை மட்டும், 2 வழி சாலையாகவும், சில இடங்களில் ஒரு வழி சாலையாகவும் உள்ளது.
அதன்காரணமாக அதிகளவு விபத்து ஏற்பட்டு வருவதால் அனைத்து பகுதிகளிலும் குறைந்த பட்சம் இரு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கடலுார் பெண்ணையாற்றில் புதியதாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதேபோல கெடிலம் ஆற்றில் அண்ணா மேம்பாலம் என்கிற ஒரே பாலம் மட்டுமே பயன்பட்டு வந்தது.இந்நிலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் 22.250 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆற்றின் குறுக்கே இருந்த பழைய இரும்பு பாலம் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் பாலம் கட்டுமானப்பணி துவங்கியது.
பாலம் கட்டுமானப்பணி துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தரைதளத்தில் இருந்து பில்லர்கள் அமைத்து, மேல்தளம் போடும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் வேகமாக நடந்து வந்த பணிகள் கடந்த 6 வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. காண்ட்ராக்டர் பணி செய்ய தயாராக இருந்தாலும் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. உண்மை நிலை அறிய பல முறை அதிகாரிகளிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'ட்ரூ காலரை' பார்த்து, போனை எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். எல்லாம் கமிஷன் பிரச்னைதான் எனஒப்பந்த ஊழியர் ஒருவர் கூறினார்.