/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் போட்டியிடும் தி.மு.க.,? குஷியில் உடன்பிறப்புகள்
/
பண்ருட்டியில் போட்டியிடும் தி.மு.க.,? குஷியில் உடன்பிறப்புகள்
பண்ருட்டியில் போட்டியிடும் தி.மு.க.,? குஷியில் உடன்பிறப்புகள்
பண்ருட்டியில் போட்டியிடும் தி.மு.க.,? குஷியில் உடன்பிறப்புகள்
ADDED : நவ 04, 2025 09:48 PM
பண்ருட்டி தொகுதியில் த.வா.க. தலைவர் வேல்முருகன் கடந்த, 2021 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பண்ருட்டி தொகுதி தி.மு.க.வினருக்கும், த.வா.க.வினருக்கும் இடையே தொடர்ந்து நிலவும் கருத்துவேறுபாடு காரணமாக வரும் 2026 சட்டசபை தேர்தலில் அந்த தொகுதியில் வேல்முருகன் எம்.எல்.ஏ., போட்டியிட விரும்பவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
அண்ணாகிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் கடந்த 2006 ம் ஆண்டு மறுசீரமைப்புக்கு முன் நெல்லிக்குப்பம் தொகுதியாக இருந்தது முதல் எம்.எல்.ஏ., சீட் கேட்டு முயற்சித்து வருகிறார்.
இவர் கடந்த 2011 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதி தி.மு.க.வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு எதிராகவும், கடந்த 2016 தேர்தலில் பண்ருட்டி தொகுதி தி.மு.க.வேட்பாளர் பொன்குமாருக்கு எதிராகவும் உள்ளடி வேலை பார்த்ததாக வெங்கட்ராமன் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அண்ணாகிராமம் ஒன்றிய தி.மு.க.,செயலாளர் வெங்கட்ராமன் கூட்டணி கட்சிக்கு பண்ருட்டி தொகுதியை ஒதுக்கக்கூடாது எனவும், தி.மு.க.வினருக்கு தான் பண்ருட்டி தொகுதி வழங்க வேண்டும் தெரிவித்து வந்தார்.
சென்னையில் கடந்த சிலவாரங்களுகு்கு முன் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணலில் தொகுதியை சேர்ந்த நகர, பேரூர், கட்சி நிர்வாகிகள் பண்ருட்டியை தி.மு.க.வினருக்கு வழங்க கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து பண்ருட்டி தொகுதியில் போட்டியிட அண்ணாகிராமம் ஒன்றிய ெசயலாளர் வெங்கட்ராமன் , பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் இருவரும் தீவிர முயற்சியில் உள்ளனர்.
அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஒத்துழைப்புடன் பண்ருட்டி தொகுதியில் தனக்கு சீட் வழங்கப்படும் என நம்பிக்கையுடன் பணியை துவக்கி செய்து வருகிறார்.
இதற்கு உட்கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் தி.மு.க.வினருக்கு பண்ருட்டி தொகுதி கிடைக்கும் வாய்ப்புள்ளதால், கழக உடன்பிறப்புகள் குஷியில் உள்ளனர்.

