/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் திடீர் கனமழை: மரம் முறிந்து 2 வீடுகள் சேதம்
/
பெண்ணாடத்தில் திடீர் கனமழை: மரம் முறிந்து 2 வீடுகள் சேதம்
பெண்ணாடத்தில் திடீர் கனமழை: மரம் முறிந்து 2 வீடுகள் சேதம்
பெண்ணாடத்தில் திடீர் கனமழை: மரம் முறிந்து 2 வீடுகள் சேதம்
ADDED : ஆக 11, 2025 06:47 AM

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் பெய்த கனமழை காரண மாக விருத்தாசலம் - திட்டக்குடியில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4:00 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பெண்ணாடம் கடைவீதி முதல் தேரடி வரை 200 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.
தி.இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள புளியமரம் வேரோடு ராமநத்தம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.
தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், பொது மக்கள் உதவியுடன் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இதனால் ராமநத்தம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
திட்டக்குடி, பெருமுளை சாலையோரமுள்ள 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரக்கிளை முறிந்து, அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி மனைவி ராணி, 53; முருக ராஜ் ஆகியோரது ஓட்டு வீட்டின் மீது மரக்கிளை விழுந்தது.
வீட்டின் ஓடு உடைந்து விழுந்ததில், ராணிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வருவாய்த்துறை மற்றும் திட்டக்குடி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.