sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காய்கறி விலை 'திடீர்' அதிகரிப்பு நடுத்தர குடும்பத்தினர் திணறல்

/

காய்கறி விலை 'திடீர்' அதிகரிப்பு நடுத்தர குடும்பத்தினர் திணறல்

காய்கறி விலை 'திடீர்' அதிகரிப்பு நடுத்தர குடும்பத்தினர் திணறல்

காய்கறி விலை 'திடீர்' அதிகரிப்பு நடுத்தர குடும்பத்தினர் திணறல்


ADDED : நவ 02, 2025 04:24 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில் காய்கறி கள் மற்றும் மளிகை பொருட் களின் விலை 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.

கடலுார் மாவட்டத்தில் உள்ளூர் காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பச்சை மிளகாய், சுரைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பருவ மழைக்காலம் முடிந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சாகுபடி துவங்கும்.

செடிகள் வளர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் விளைச்சல் துவங்கும். மாவட்டத்தில் குறிப்பாக கடலுார் தாலுகாவில் அதிகளவில் நாணமேடு, உச்சிமேடு, துாக்கணாம்பாக்கம், பாலுார் மற்றும் மலை கிராமங்களிலும் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் கத்தரிக்காய் விலை ஒரு கிலோ 5 ரூபாயாக இருந்தது. வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகின.

இதில், கத்தரிக்காய் விலை மிகவும் குறைவான அளவில் இருந்ததால் விவசாயிகளால் தொடர்ந்து செடியை களை எடுப்பது, உரமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடமுடியவில்லை. உற்பத்தி செலவைவிட குறைந்த விலைக்கு 3 மாதங்களாக தொடர்நது விற்பனை செய்யப்பட்டதால் கத்தரி செடியை பராமரிக்காமல் ஏர் உழுது நவரை பட்டத்தில் நெல் நடவு செய்தனர்.

இதனால் கத்தரி பரப்பளவு குறைந்தது. அதேபோல பூசணிக்காய், சுரைக்காய், கொத்தவரைக்காய் போன்ற காய்கறி செடிகளும் பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதன் காரணமாக எஞ்சிய விவசாயிகள் ஓரளவு உள்ளூர் காய்கறியினால் லாபம் பார்த்து வந்தனர்.

அவ்வப்போது பருவம் தவறிய கன மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகின. இதனால் ஈரோடு, சேலம், பவானி, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து காய்கறிகள் வரவழைத்து விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் உள்ளூர் மற்றும் மலைக்காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்துவிட்டன. எப்போதும் கிலோ 10, 12 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 32 ரூபாயாகவும், கடந்த வாரம் கிலோ 55 ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய் 90 ரூபாயாகவும், கிலோ 56 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் 90 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

உருளை கிலோ 40 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், 60 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 25 ரூபாயிலிருந்து 35 ரூபாய்க்கும், கரணைக்கிழங்கு 60 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், கொம்பு அவரைக்காய் 160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சேலம், தர்மபுரி மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய காய்கறியினால் இந்த விலை உயர்வு என வியாபாரிகள் கூறுகின்றனர்.

காரணம் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வருவதால் வாகன வாடகை உள்ளிட்டவைகளால், காய்கறி விலை விறுவிறு என உயர்ந்து வருகிறது.

காய்கறி விலைக்கு போட்டியாக மளிகைப் பொருட்களும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எண்ணெய் 155 ரூபாய்க்கும், துவரம்பருப்பு 125 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us