/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.கே.டி சாலை உயர்மட்ட பாலத்தில் இரவு நேரங்களில் விபத்து அபாயம்
/
வி.கே.டி சாலை உயர்மட்ட பாலத்தில் இரவு நேரங்களில் விபத்து அபாயம்
வி.கே.டி சாலை உயர்மட்ட பாலத்தில் இரவு நேரங்களில் விபத்து அபாயம்
வி.கே.டி சாலை உயர்மட்ட பாலத்தில் இரவு நேரங்களில் விபத்து அபாயம்
ADDED : நவ 02, 2025 04:23 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய குப்பத்தில் இருண்டு கிடக்கும் வி.கே.டி. சாலை உயர்மட்ட பாலத்தினால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுாரில் துவங்கி குமாரக்குடி வரை வயல்வெளியில் செல்கிறது.
பாலத்தின் வழியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாருர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பல்வேறு வாகனங்கள், 24 மணிநேரமும் சென்று வருகின்றன.
பின்னலுார், சேத்தியாத் தோப்பு குறுக்குரோடு ஆகிய உயர்மட்ட பாலங்களில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இரவு நேரங்களில் வெளிச்சம் உள்ளது. பெரியகுப்பம் உயர்மட்ட பாலத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு மாதங்களுக்கு மேலாக ஜென ரேட்டர் வைத்து இரவு நேரங்களில் லைட் வெளிச்சம் போட்டு வந்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரியகுப்பம் உயர்மட்ட பாலத்தின் கீழ் வைக்கபட்டிருந்த ஜெனரேட்டரிலிருந்து மர்ம நபர்கள் இரண்டு பேட்டரிகளை யும் கழற்றி சென்றனர்.
இதனால் ஜெனரேட்டர் இல்லாமல் பாலம் இருண்டு கிடப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பாலத்தில் வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் நடந்து வருவதாக, வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள், வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு, நகாய் அதிகாரி கள் ஆய்வு செய்து உயர்மட்ட பாலத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

