ADDED : நவ 02, 2025 04:23 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நவம்பர் மாத பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் அறிக்கை:
குறிஞ்சிப்பாடி வட்டாரம், இடக்கொண்டான்பட்டு கிராமத்தில், வரும் 7ம் தேதி, நிலக்கடலையில் பயிர் மேலாண்மை மற்றும் விதை உற்பத்தி பயிற்சி நடக்கிறது. வடமூரில் 8ம் தேதி பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி நடக்கிறது.
12ம் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்முனைவோருக்கான சந்தைமயமாக்குதல் பயிற்சி; 13ம் தேதி நெல்லிக்குப்பத்தில் கரும்பு சோகை மட்கவைத்தல் பயிற்சி; 14ம் தேதி மஞ்சக்கொல்லையில் அசோலா பயிர்கள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி; ஆகியவை நடக்கிறது.
வரும், 15ம் தேதி சிறுகாலுாரில் பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மை; 18ம் தேதி நெல்லிக்குப்பத்தில் நொதித்த அங்கக உர பயன்பாடு; 20ம் தேதி வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி; ஆகியவை நடக்கிறது.
21ம் தேதி பூதங்குடியில் நெற்பயிரில் களை மற்றும் நீர் மேலாண்மை; 22ம் தேதி பல்லவராயநத்தத்தில் காய்கறி பயிர்களில் அங்கக மேலாண்மை; 25ம் தேதி மேலபுதுப்பேட்டையில் விதை உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மை பயிற்சி நடக்கிறது.
26ம் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி; 27ம் தேதி நந்தப்பாடியில் உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி; 28ம் தேதி பெரியகொசப்பள்ளத்தில் பாரம்பரிய நெல் ரகங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

