/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடியில் திடீர் மழை: 1,000 நெல் மூட்டைகள் சேதம்
/
திட்டக்குடியில் திடீர் மழை: 1,000 நெல் மூட்டைகள் சேதம்
திட்டக்குடியில் திடீர் மழை: 1,000 நெல் மூட்டைகள் சேதம்
திட்டக்குடியில் திடீர் மழை: 1,000 நெல் மூட்டைகள் சேதம்
ADDED : மே 17, 2025 11:50 PM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பெய்த திடீர் கனமழை காரணமாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த அருகேரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, அருகேரி, எரப்பாவூர், வடகரை, நந்திமங்கலம், கோவிலுார், சிறுமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து, மூட்டைகளாகவும், தரையில் கொட்டியும் வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால், கொள்முதல் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தன. அதனால் நெல்லின் தரம் குறையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோன்று, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் மழைநீரில் நனைந்தன.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த வாரம் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளோம். கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதால், திடீர் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. நெல்லில் ஈரப்பதம் உள்ளதால் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்கருதி கொள்முதல் பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றனர்.