/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு
/
லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு
லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு
லோடு லாரியில் திடீர் புகை: பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : நவ 22, 2024 06:26 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே சிமென்ட் லோடு டாரஸ் லாரியில் திடீர் புகை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
அரியலுார் மாவட்டம், தளவாய் கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து நேற்று மாலை 6:30 மணியளவில் சிமென்ட் லோடு லாரி பெண்ணாடம் வழியாக திருவண்ணாமலை சென்றது.
லாரியை, விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் சங்கர், 45, ஓட்டினார். மாளிகைக்கோட்டம் அருகே லாரி சென்றபோது, பின்புற டயரில் கரும்புகை வெளியேறுவதைக்கண்டு, அவ்வழியே சென்றவர்கள் லாரியை நிறுத்தச்சொல்லி கூச்சலிட்டனர். லாரியை நிறுத்தி டிரைவர் பார்த்தபோது டயரின் ரிம்மிலிருந்து கரும்புகை வெளியேறியது தெரிந்தது.
பொது மக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி புகையை கட்டுப்படுத்தப்பட்டது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.