/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் அவதி
/
சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் அவதி
ADDED : நவ 08, 2025 01:48 AM

புவனகிரி: வாண்டையான் குப்பத்தில், பாதை மற்றும் சுடுகாடு வசதி இல்லாமல் அப்பகுதியினர் கடும் அவதியடைகின்றனர்.
புவனகிரி தாலுகா, வாண்டையான் குப்பம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களுக்கு சுடுகாடு மற்றும் இடுகாடு வசதி இல்லாமல், வெள்ளாற்று படுகையில் இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிக்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல போக்குவரத்திற்கு வழியில்லாமல் வயல் பகுதியில் சுமந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இது குறித்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழையால் பாதையில் தண்ணீர் தேங்கியதால், சேறு ம் சகதியுமான பாதையிலும், வயல் பகுதியிலும் இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் சுமந்து சென்று வருகின்றனர்.
இ துகுறித்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

