ADDED : நவ 08, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகணேஷ், நேற்றுமுன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூத்தப்பாக்கம் மதுரைவீரன் நகரைச் சேர்ந்த சண்முகம்,59; என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டறிந்தார்.
தொடர்ந்து, அதை பறிமுதல் செய்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சண்முகம் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனர்.

