ADDED : நவ 08, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: வெள்ளாற்றில் இருந்து காரில் மணல் மூட்டைகளை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, சக்கரமங்கலம் வழியாக செல்லும் வெள்ளாற்றில் இருந்து காரில் மணல் கடத்தி வந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
அவர், கருவேப்பிலங்குறிச்சி அன்புமணி நகர், மதியழகன் மகன் கஜேந்திரன், 27, என்பது தெரிந்தது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, கஜேந்திரனை கைது செய்து, கார் மற்றும் 5 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

