/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கர்நாடகாவில் இருந்து வந்த சர்க்கரை மூட்டைகள்
/
கர்நாடகாவில் இருந்து வந்த சர்க்கரை மூட்டைகள்
ADDED : ஜன 22, 2025 11:44 PM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கர்நாடாகாவில் இருந்து ரயில் மூலம் சர்க்கரை மூட்டைகள் வந்தது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலைக்கு கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500 டன் சர்க்கரை மூட்டைகள் வந்தது.அதை லாரிகள் மூலம் ஆலைக்கு எடுத்து சென்றனர்.இதுபற்றி விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது ஆலை நிர்வாகம் மாநில அரசு அறிவித்த விலையில் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
மேலும் கரும்புக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.இதனால் நெல்லிக்குப்பம் பகுதியில் கரும்பு பயிரிடும் பரப்பு வெகுவாக குறைந்துள்ளது.இதனால் தேவைக்காக அதிக செலவு செய்து மற்ற மாநிலங்களில் இருந்து சர்க்கரை,மொலாசஸ்,பழுப்பு சர்க்கரை ஆகியவற்றை எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பாக்கி தொகையையும் கரும்புக்கு கூடுதல் விலையையும் கொடுத்தால் கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரித்து மற்ற மாநிலங்களில் இருந்து செலவு செய்து எடுத்து வர வேண்டியிருக்காது என கூறினர்.

