/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
/
கரும்பில் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை
ADDED : மார் 19, 2025 11:55 PM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரும்பில் பல இடங்களில் பஞ்சு அசுவினி பூச்சி தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுபற்றி கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி கூறுகையில், மாறுபட்ட கால சூழ்நிலையால் இந்த பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. பூச்சி தாக்கினால் சோகை காய்ந்து மகசூல் பாதிக்கும். குறைந்தளவு காணப்பட்டால் உடனடியாக அந்த சோகைகளை எடுத்து தீவைத்து எரிக்க வேண்டும். அதிகளவு பூச்சி தாக்குதல் இருந்தால் அசாடிராக்டீன் 1500 பி.பி.எம்5 மிலி மருந்து அல்லது இமிடா குளோர்பிட் 17.8 எஸ்.எல்.5 மிலி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் ஒட்டும் திரவம் கலந்து தெளித்து பூச்சியை கட்டுபடுத்தலாம் என கூறினார்.