/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
/
கரும்பு விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ADDED : நவ 08, 2024 05:37 AM

பெண்ணாடம்: இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில், கரும்பில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது.
பெண்ணாடம் கரும்பு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஜெ., குழுமத்தின் கரும்பு ஆலோசகர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக பங்குதாரர் ராஜேந்திரா, முதுநிலை உப தலைவர் ரமேஷ், பொது மேலாளர்கள் திருஞானம், புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தனர். மண்டல மேலாளர் குமணன் வரவேற்றார்.
மண்டல மேலாளர் வீரமணி, கரும்பு அலுவலர்கள், கரும்பு ஆய்வாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிலையத்தின், முன்னாள் இயக்குனர், டாக்டர் பக்க்ஷிராம் பங்கேற்று, நோய் தாக்காத உயர் விளைச்சல் கரும்பு ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், இயந்திர அறுவடை முறைகள், உளவியல் கரும்பு நடவு முறை, கரும்பு பயிர் காப்பீடு, மருதாம்பு கரும்பில் அதிக நோய் தாக்குதல் ஏற்படுவதை தடுப்பது உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு கருத்துகள் மற்றும் ஆலோசணை வழங்கினார்.
ஆலை நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், வரும் அரவை பருவத்தில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு 15 நாட்களில் பணம் பட்டுவாடா செய்வது. வங்கி பயிர் கடன் திட்டங்கள், இயந்திர மூலம் கரும்பு அறுவடை செய்து தர ஏற்பாடுகள் செய்து தரப்படும் என விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

