/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பில் குருத்து மாவு பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்த அதிகாரிகள் விளக்கம்
/
கரும்பில் குருத்து மாவு பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்த அதிகாரிகள் விளக்கம்
கரும்பில் குருத்து மாவு பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்த அதிகாரிகள் விளக்கம்
கரும்பில் குருத்து மாவு பூச்சி தாக்குதல்; கட்டுப்படுத்த அதிகாரிகள் விளக்கம்
ADDED : மே 27, 2025 07:04 AM
நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்டத்தில் கரும்பில் குருத்து மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கரும்பு ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியல் துறை பேராசிரியர்கள் துரைசாமி, சசிக்குமார் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவு கரும்பு சாகுபடி செய்கின் றனர். தற்போது நிலவும் சீதோஷ்ன நிலை காரணமாக கரும்பில் குருத்து மாவு பூச்சி மற்றும் பொக்கஹ் போயிங் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
சாறு உறிஞ்சும் பூச்சியான குருத்து மாவு நோய்க்கு காரணமாக உள்ளது. இந்நோய் மூன்று மாதத்தில் இருந்து அறுவடை வரை தாக்கக் கூடியதாகும்.
கரும்பின் நுனி மற்றும் குருத்து பகுதியிலும் மாவு பூச்சி அடை அடையாக வெண்மை நிறத்தில் இருக்கும். மாவு பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படும். கருப்பு எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
தாக்கப்பட்ட கரும்பின் இளம் இலைகள் குறுகி வளர்ச்சி குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.
இந்நோய் காற்று, தண்ணீர் மூலமாகவும் பரவுகிறது. இதை கட்டுபடுத்த நடவு செய்யும் போது விதை கரணையை முறையாக ப்ரோபிகோணசோல் மற்றும் இமிடாகுளோர்ப்ரிட் மருந்தில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
தாக்கப்பட்ட கரும்பு குருத்துகளை சேகரித்து அழிக்க வேண்டும். வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 45,60,75 நாட்களில் ஏக்கருக்கு 1,1.500, 2 கிலோ அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
நோய் தாக்குதல் அறிந்தவுடன் ப்ரோபிகோணசோல் மற்றும் இமிடாகுளோர்ப்ரிட் மருந்தை தெளித்து கட்டுபடுத்தலாம். நோய் தாக்குதல் தெரிந்தால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்.