/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கல்
ADDED : ஏப் 23, 2025 10:34 PM

விருத்தாசலம்:
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மற்றும் பண்ணை இயந்திரம், இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கோவை வேளாண் பல்கலை., கல்வி இயக்குனர் முருகன் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் செயல்விளக்க பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் நேரடி நெல் விதைப்பில் களை நிர்வாகம் பற்றி பேசினார்.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மாணவிகள், உயிரி கரிமம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், எண்ணெய் பிழியும் இயந்திரத்தில் மணிலா மற்றும் தேங்காய் பயன்படுத்தி எண்ணெய் பிழியும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தார்பாலின், மண்வெட்டி, எண்ணெய் பிழி இயந்திரம், நேரடி நெல் விதைப்பு உருளை இயந்திரம், கோனோ களை எடுக்கும் கருவி ஆகியவை பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டது.
முனைவர் சுகுமாறன், இணை பேராசிரியர் ஜெயக்குமார், முனைவர் பாரதிகுமார், முனைவர் காயத்ரி, முனைவர் கலைச்செல்வி மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

