ADDED : செப் 20, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், நல்லாசிரியர் விருது மற்றும் பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார். முன்னாள் துணை ஆளுனர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி வாழ்த்திப் பேசினார்.
அதன்பின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பொற்செல்விக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சங்க நிர்வாகி சுவாமிநாதன் நன்றி கூறினார்.