ADDED : நவ 01, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் சூரசம்ஹார விழா துவங்குகிறது.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. வரும் 6ம் தேதி முருகன் சக்திவேல் வாங்கும் உற்சவமும், 7ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை லோகு அய்யர் செய்து வருகிறார். மேல்பட்டாம்பாக்கம் சுப்ரமணிய சுவாமி கோவிலிலும் சூரசம்ஹார விழா நடக்கிறது.