/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு
/
வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு
ADDED : டிச 14, 2024 03:52 AM

காட்டுமன்னார்கோவில்: அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளதால், ஜெயங்கொண்டம் பொன்னேரியில் இருந்து உபரி நீராக 800 கன அடி வெளியேற்றப்படுகிறது. இதனால் வடவாறு, செங்கால் ஓடை வடிகால், பாப்பாக்குடி வடிகால், ஆண்டிப்பாளையம் வடிகால் வழியாக வீராணம் ஏரிக்கு 23,000 கன அடி நீர் வரத்து உள்ளது.
பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு  வி.என்.எஸ் மதகு வழியாக 3,000 கன அடியும், லால்பேட்டை கலுங்கு மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் 18,000 கன அடி நீர் திறந்த விடப்படுகிறது.
மேலும் கருவாட்டுவாலி ஓடை, நாரை ஏரி வழியாக வரும் தண்ணீர் வடவாறு வடிகால் மதகு வழியாக 5,000 கன அடி திறந்து விடப்பட்டது.
வெள்ளியங்கால் ஓடையில் 26,000 கன அடி நீர் வெளியேற்றுவதால்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

