/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
வீராணத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : நவ 28, 2024 07:03 AM

காட்டுமன்னார்கோவில்: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீராணம் ஏரிஉள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ராமன் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்ட மழை பாதிப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ராமன் நேற்று காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, வீராணம் ஏரியை ஆய்வு செய்தார். ஏரிக்கு நீர்வரத்து, இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, ஏரிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்குவும், நீர் மேலாண்மையை கடைபிடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்து, போதிய வசதிகள செய்த தரவும் அறிவுறுத்தினார்.
அப்போது, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவக்குமார், பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு கோட்ட பொறியாளர் காந்தரூபன், கீழணை எஸ்.டி.ஓ., கொளஞ்சி, வீராணம் ஏரி உதவி பொறியாளர் சிவராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஊரக வளர்ச்சித் துறை
வடக்கிழக்கு பருவ மழையையொட்டி ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் கலெக்டர் சரண்யா, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலப்பாடி, பெராம்பட்டு, சிவபுரி ஆகிய ஊராட்சிகளில்உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
குமராட்சி பி.டி.ஓ., சரவணன், உதவி பொறியாளர் சுரேஷ், ராஜா, மண்டல துணை பி.டி.ஓ., இலக்கியா உடனிருந்தனர்.
மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.