/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
/
குமராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு
ADDED : நவ 17, 2024 02:45 AM
கடலுார்: குமராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அப்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து. காட்டுக்கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசுத் திட்டங்களின்கீழ் கட்டப்பட்ட கிராமப்புற விளிம்புநிலை மக்களுக்கான வீடுகளை பழுதுபார்த்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, குமாராட்சி பி.டி.ஓ.,க்கள் சரவணன், சிவகுருநாதன், பொறியாளர்கள் ராஜா, உதவி செயற்பொறியாளர் பிரசாத் கலந்து கொண்டனர்.